SCENE NUMBER 62

SCENE NUMBER 62

*தலைப்பு வெளியானது தமிழக சினிமா ஊடகங்கள் அனைத்தும் தழுவி முத்தமிட்டது*

மலையாளத்தில் 2016ம் ஆண்டு கேரளாவில் மிக பெரும் சர்ச்சையை ஏற்பத்திய படம் *"ஆதம்"(ADAM)* அதன் இயக்குனர் மற்றும் நாயகன் *சமர் (ZAMAR)* ஆவர். இவர் கடந்த மார்ச் மாதம் தமிழில் *அம்பாசடர்* என்னும் படத்தை *தனிஷா இன்டெர்னஷனல்* என்னும் தயாரிப்பு நிறுவனத்தில் இயக்க போவதாக அறிவிப்பு வெளியானது, அப்படத்தில் வன்முகம் படத்தின் *நடிகர் கதிரவன்* நாயகனாகவும் ஒப்பந்தமானார்.

இதற்கிடையில் *கொரோனா என்னும் வைரஸ் பரவல் காரணமாக* படப்பிடிப்பிற்கு இந்தியா முழுவதும் தடை போடப்பட்டது. அப்படத்தின் குழுவினரும் பெரும் கவலையுடன் இருந்தனர். ஏழு மாதங்களுக்கு பிறகு படபிடிப்பிற்கு செல்ல பல உதரவுடன் தளர்வுகளையும் தமிழக அரசு கொடுத்தது, ஆனால் இப்பட குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு தளர்வுகள் கிடைக்காத காரணத்தால், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் ஒரு முற்றிலும் மாறுபட்ட கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஆதம் சமர். இதிலும் அம்பாசடர் படத்தின் *நடிகர் கதிரவன்* நாயகனாக நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் மலையாள *நடிகர் அமல்தேவ்* மற்றும் பலர் இந்த த்ரில்லர் சஸ்பென்ஸ் கதையில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

முதல்முறையாக *நவமுகுந்தா* என்னும் புது *தயாரிப்பு நிறுவனம்* இப்படத்தினை தமிழில் தயாரிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்புடன் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியாகியது, அதன் தலைப்பு இன்று மாலை வெளியாகியது அப்படம் சமூகவலைத்தளங்களில் மாபெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

எது எப்படியோ தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குனரும், நல்ல நடிகர்களும் மட்டுமில்லாமல் ஒரு நல்ல திரைப்படமும் வரப்போவதை நினைத்து கோடம்பாக்கம் மகிழ்ச்சிக்கொள்கிறது. புதுப்பட குழுவினர்களுக்கு மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள். *கேரளாவில் இருந்து வந்தாரையும் வாழவைக்குமா தமிழகம் என்று பார்ப்போம்*.